பள்ளிக்கூடம் போகிறபோது தான்
ஓரளவு தெரிகிறது பெற்றோர்கள் அருமை
கல்வி முடிக்கிற போது தான்
ஓரளவு தெரிகிறது ஆசிரியர்கள் அருமை
பணியில் ஈடுபடுகிற போது தான்
ஓரளவு தெரிகிறது பணத்தின் அருமை
பலரிடம் பழகுகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது நட்பின் அருமை
திருமணம் புரிகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இருவரின் அருமை
புன்னகை சிந்துகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இன்பத்தின் அருமை
கண்ணீர் வழிகிற போது தான்
ஓரளவு தெரிகிறது சோகத்தின் அருமை
மழலையைப்பெறும்போது தான்
ஓரளவு தெரிகிறது படைப்பின் அருமை
கூர்ந்து பார்க்கிற போது தான்
ஓரளவு தெரிகிறது இயற்கையின் அருமை
முதுமையை நெருங்குகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இளமையின் அருமை
வாழ்ந்து முடிகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது வாழ்வின் அருமை !
Saturday, August 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்
அழகான வரிகள்
அர்த்தம் நிறையவே உண்டு வரிகளில்
இலங்கையில் இருந்து யாதவன்
முதலுக்கு வாழ்த்துக்கள் தமிழ் ஆசிரியரே...
நன்றி கவிக்கிழவன்,அஷோக்.
என் மகன் தான் எனக்காக பதிவுகளை வெளியிடுகிறார். இப்பொழுது தான் கணினியில் பழகிக் கொண்டிருக்கிறேன். ஆகையால், உடனுக்குடன் மறுமொழி அளிக்க இயலவில்லை.
ரசித்தேன் பேராசிரியரே.
கூர்ந்து படிக்கிற போதுதான் தெரிகிறது
உங்கள் கவிதையின் அருமை..!
புதிதாக வலைப்பதிவு தொடங்கியுள்ள தங்களுக்கு என் வாழ்த்துகள்!!
தங்கள் வழியாக நல்ல - ஆக்கமான படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
நன்றி சுப.நற்குணன்,nzpire !
நல்வரவு ஐயா, வணக்கம் !
Post a Comment